கடந்த ஆண்டு ‘பிரின்ஸ்’ படத்தை ஓடவிட்ட ‘சர்தார்’! இந்த ஆண்டு தீபாவளி வெற்றியாளராவாரா கார்த்தி?

கார்த்தி நடிக்கும் படங்கள் எல்லாம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானால் மிகப்பெரிய வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜயின் ‘பிகில்’ படத்துடன் கார்த்தியின் ‘கைதி’ திரைப்படம் வெளியாகி இருந்தது.
அதைப்போல, கடந்த 2022-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்துடன் கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்படம் வெளியாகி இருந்தது. இதில் 2019-ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. அதைப்போல, 2022-ஆம் ஆண்டு வெளியான சர்தாரும் அவருக்கு 100 கோடி வசூலை கொடுத்தது.
பிரின்ஸ் படத்தை விட அதிகமாக வசூல் செய்து கடந்த ஆண்டின் தீபாவளி வெற்றி படமாக சர்தார் தான் இருந்தது என்றே சொல்லவேண்டும். இந்த நிலையில், இதுவரை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான கார்த்தியின் படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில், இந்த 2023-ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டும் கார்த்தியின் படம் திரைக்கு வரவிருக்கிறது.
ராஜூ முருகன் இயக்கத்தி அவர் நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் வரும் நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.இந்த படத்திற்கான ட்ரைலர் எல்லாம் வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறவேண்டும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜப்பான் படம் மட்டும் தனியாக ரிலீஸ் ஆகவில்லை.
இந்த படத்துடன் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படமும் விக்ரம் பிரபு நடித்துள்ள “ரெய்டு” திரைப்படமும் வெளியாகவுள்ளதால் தீபாவளிக்கு கடுமையான போட்டி நிலவும் என கூறப்படுகிறது. எனவே, இதுவரை தீபாவளி பண்டிகையில் வெளியான கார்த்தியின் படங்கள் அணைத்து வெற்றியை கொடுத்திருக்கும் நிலையில், இந்த முறை ஜப்பான் படம் அவருக்கு வெற்றியை கொடுத்து தீபாவளி வெற்றி படமாக ஜப்பான் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
தீபாவளி 2023 பண்டிகையை முன்னிட்டு “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்”, “ரெய்டு”, “ஜப்பான்”, மூன்று திரைப்படங்கள் வெளியாகவிருக்கும் நிலையில், எந்த திரைப்படம் அதிகம் வசூல் செய்ய போகிறது என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025