போன வருஷம் ஜெயிலர்…இந்த வருஷம் அமரன்! விஜய்யை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்!
அமரன் படம் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தின் டிக்கெட் விற்பனையில் முந்தி சாதனை படைத்துள்ளது.
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும் 300 கோடி வசூல் செய்து இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களில் அதிகம் வசூல் கொடுத்த படம் என்ற சாதனையையும் அவருக்கு படைத்துக்கொடுத்து இருக்கிறது.
அது மட்டுமன்றி இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் அமரன் படம் தான் இருக்கிறது. முதலிடத்தில் உலகம் முழுவதும் 440 கோடிகாள் வரை வசூல் செய்து கோட் படம் உள்ளது. அந்த வசூல் சாதனையை அமரன் முறியடிக்கவில்லை என்றாலும் மற்றோரு சாதனையில் கோட் படத்தை அமரன் இந்த ஆண்டு பீட் செய்துள்ளது.
அது என்ன சாதனை என்றால் புக் மை ஷோவில் – டிக்கெட் அதிகமாக விற்பனையான சாதனையில் தான். விஜய் நடிப்பில் கடைசியாக இந்த ஆண்டு வெளியாகி இருந்த கோட் படத்தின் டிக்கெட் விற்பனை புக் மை ஷோவில் 4.51 மில்லியனாக இருந்தது. இது தான் இந்த ஆண்டு அதிகம் புக் மை ஷோவில் டிக்கெட் விற்பனையான படம் என்ற சாதனையையும் வைத்து இருந்தது.
ஆனால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் படம் அமோக வரவேற்பை பெற்று வருவதால் படம் இதுவரை புக் மை ஷோவில் கோட் படத்தை விட அதிகமாக ( 4.52 மில்லியன்) டிக்கெட் விற்பனையாகி இந்த ஆண்டு அதிகம் புக் மை ஷோவில் டிக்கெட் புக்கான தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் உலகம் முழுவதும் 600 கோடிகள் வசூல் செய்து புக் மை ஷோவில் அதிகம் டிக்கெட் (9.21 மில்லியன்) புக்கிங் ஆன திரைப்படம் என்ற சாதனையை படைத்திருந்தது.அதனை தொடர்ந்து இந்த ஆண்டு அமரன் படம் அந்த சாதனையை படைத்துள்ளது.