ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!
97-வது ஆஸ்கர் விருதுக்கு இந்திய சார்பாக கிரண் இயக்கத்தில் வெளிவந்த 'லாபத்தா லேடீஸ்' என்ற இந்தி மொழித் திரைப்படம் அனுப்பப்படுகிறது.
சென்னை : 2025 ஆஸ்கரில் ‘சிறந்த வெளிநாட்டு படங்கள்’ பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண் ராவ் இயக்கி ஹிந்தியில் இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான ‘லாப்பத்தா லேடீஸ்’ அனுப்பப்படுகிறது.
தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியான 28 படங்களோடு போட்டியிட்டு ‘லாப்பத்தா லேடீஸ்’ வெற்றி பெற்றுள்ளது. கான் திரைப்பட விழாவில் விருது வென்ற ‘All We Imagine As Light’ படமும் இந்த போட்டியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
India’s Official Entry for the 2024-25 Oscars for Best Foreign Language Film Category at the 97th Academy Awards (Oscars 2025) is #LaapataaLadies (Hindi) pic.twitter.com/VWApCyOUsU
— Touring Talkies (@ToouringTalkies) September 23, 2024
அப்படி என்னதான் இருக்கிறது இந்த திரைப்படத்தில் என்று பார்த்தால் ஆணாதிக்கத்தைப் பற்றி சமூக நையாண்டியுடன் சாட்டையடியாக சொல்லுகிறது.
லாப்பத்தா லேடீஸ்
திருமணமான இரண்டு ஜோடி தம்பதிகள் ஒரே ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பொழுது, இரவு பொழுதில் தவறுதலாக அந்த இரண்டு ஜோடிகளில் மணப்பெண் மாற்றம் நடந்துவிடுகிறது. இதன் பிறகு, என்ன நடக்கிறது என்பதை உணர்ச்சிபூர்வமாக பாலின சமத்துவத்துடன் கூறியள்ள இந்த படத்தை ஆணாதிக்க மனநிலையில் இருந்து வெளியில் வரவேண்டும் என்பதை விளக்கும் விதமாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது.
வட இந்திய கிராமங்களில் புது மாப்பிள்ளை என்றால், கோட்சூட் போட வேண்டும். அதுவும், அனைவருக்குமே ஒரே மாதிரியான நிற கோட்சூட் அணிவது வழக்கம். அதேபோல புதுமணப் பெண்களுக்கும் ஒரேமாதிரியான நிற முக்காடு புடவை தான். அந்தப் பெண்களுக்குத் திருமண வயது வந்தது மாதிரிகூட தெரியாது.
அப்படி தான் படத்தில் அந்த இரண்டு தம்பதிகளும் உடை அணிந்து இருந்தனர். நல்ல இருட்டு நேரத்தில் ஒரு நிலையத்தில் ரயில் நிற்க, முக்காடு போட்டிருக்கும் மனைவியை அழைத்துவிட்டு இறங்கி ஊருக்கு செல்ல, புதுமண தம்பதியை வீட்டு வாசலில் நிறுத்தி ஆரத்தி எடுக்கும்போது, மனைவியின் முக்காட்டை விலக்கச் சொல்ல்ல, விலக்கியதும் அவரது கணவர் மட்டுமல்ல ஒட்டுமொத்த கிராமமே ஷாக் ஆகிறது.
இப்படி படத்தின் கதை தொடங்கி ‘தலையை மூடி முக்காடு போட்டுட்டீங்க. தலைநிமிர்ந்து பாக்கக் கூடாது. கால் விரல்கள மட்டும்தான் பாக்கணும்னு சொல்லிட்டீங்க. அப்புறம் எப்படி நிமிர்ந்து பாக்கறது?’ என்று அந்தப் பெண் கேட்கும் கேள்விகளில் தொடர்ந்து படம் நெடுக, பெண்களை வாட்டிவதைக்கும் சடங்கு, சம்பிரதாயங்களுக்கு செமசெம சவுக்கடியாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.