லால் சலாம் திரைப்படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ!

LaalSalaam

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, கபில்தேவ், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படத்தின் முழு விமர்சனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லால்சலாம் விமர்சனம் 

படத்தின் கதைப்படி முரார்பாத் என்ற கிராமத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் அண்ணன், தம்பியாக மிகவும் நெருக்கமாக பழகி கொண்டு இருக்கிறார்கள். அந்த கிராமத்தில் இருந்து வளர்ந்து மொய்தீன் பாய் (ரஜினிகாந்த்) மும்பைக்கு சென்று பெரிய தொழிலதிபராக வளர்க்கிறார். அவருடைய மகன் சம்சுதீனும் (விக்ராந்த்) மற்றும் மொய்தீன் பாய் நெருங்கிய நண்பரின் மகன் திரு (விஷ்ணு விஷால்)  சிறிய வயதில் இருந்தே சண்டைபோட்டு கொண்டு இருக்கிறார்கள் .

லால் சலாம்: 45 நிமிட கேமியோ ரோலுக்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் இவ்வளவா?

இருவரும் கிரிக்கெட் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் அதில் இருந்தே சம்சுதீனுக்கும் திருவுக்கும் இடையே ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. இந்த கிரிக்கெட் வைத்து நடக்கும் ஒரு சிறிய பிரச்சனை இந்து – முஸ்லிம் மக்களிடையே பெரிய கலவரமாக வெடிக்கிறது. பிறகு முரார்பாத்  கிராமத்தில் நடைபெற இருந்த தேர் திருவிழாவும் அரசியல் கட்சி ஏற்படுத்திய சதியின் காரணமாக நிறுத்தியும் வைக்கப்பட்டது.

பிறகு தேர்த் திருவிழா நடந்ததா இல்லையா இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையே ஒற்றுமை நிலவியதா கடைசியில் என்னதான் ஆச்சு என்பது தான் படத்தின் கதை. படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்த ரஜினிகாந்த் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார். படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

பாசிட்டிவ் 

படத்தின் பாசிட்டிவ் என்றால் முதலில் கூறவேண்டியது நடிகர் ரஜினியை தான். ஏனென்றால், ரஜினி தான் படத்திற்கு முதுகெலும்பு என்றே கூற வேண்டும்.  அவர் இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றால் படம் இந்த அளவிற்கு அருமையாக வந்திருக்குமா என்பது சந்தேகம் தான் , அந்த அளவிற்கு மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்து  படத்தையே தாங்கி சென்று இருக்கிறார் என்று கூற வேண்டும்.

வழக்கமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும்  படங்களை விட இந்த திரைப்படத்தில் அதிகம் கருத்துக்களையும் அட்டகாசமான திரை கதையையும் கொடுத்திருக்கிறார். அதைப்போல படத்திற்கு மற்றொரு பாசிட்டிவான விஷயம் என்னவென்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின்  பின்னணி இசை  என்றே கூறலாம்.  அந்த அளவிற்கு அற்புதமான பின்னணி இசையை  படத்திற்காக ஏ ஆர் ரஹ்மான் கொடுத்திருக்கிறார்.

நெகட்டிவ் 

நெகட்டிவ் என்றால் படத்தின் நீளம் தான் படம் மிகவும் நீளமான காட்சிகளை கொண்டு சென்றிருக்கிறது. அதேபோல படத்தில் வரும் சில காதல் காட்சிகள் வேண்டும் என்று திணித்தது போல பார்வையாளர்களுக்கு யோசனை தோன்றியது . அதிலும் சீரியஸாக போய்க்கொண்டிருக்கிறோம் சமயத்தில் திடீரென படத்தில் காதல் பாடலை வேண்டுமென்று புகுத்தியது போல இருந்தது.

மற்றபடி இந்த விமர்சனங்களை தவிர்த்து பார்த்தால் படம் குடும்பத்துடன் தாராளமாக சென்று பார்க்கும் படமாக இருக்கும். அந்த அளவிற்கு அற்புதமான படத்தை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்திருக்கிறார். விமர்சனங்கள் படத்திற்கு அருமையாக வருவதால் கண்டிப்பாக படம் சூப்பர் ஹிட் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்