LalSalaam [file image]
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘லால் சலாம்’ உருவாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது காரணம் கூறாமல் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்துள்ளது.
ஆம், இருமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில், பிப்ரவரி 9-ஆம் தேதியை படக்குழு உறுதி செய்துள்ளது. தேர் திருவிழாவுக்கு அலப்பறை கிளப்றோம் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனை வைத்து பார்க்கும்பொழுது, பொங்கல் ரேஸிலிருந்து பின்வாங்கியது போல் தெரிகிறது. பொங்கல் தினத்தை முன்னிட்டு, ஆம், தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம், சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படம், அருண் விஜய்யின் ‘மிஷன்- சாப்டர் 1’ படமும் ஒன்றாக மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…