Categories: சினிமா

‘லால் சலாம்’ இசை வெளியீட்டு விழா! இந்த முறை வேற மாதிரி இருக்கும்…

Published by
கெளதம்

3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பல வருடங்களுக்குப் பிறகு ,‘லால் சலாம்’ படத்தின் மூலம் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில், இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், படக்குழுவினர் இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில், “லால் சலாம்” படத்தின் டீசர் வெளியானது. மேலும், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று முன்தினம் ​​​​லால் சலாம் பட தயாரிப்பாளர்கள் படத்தில் இருந்து ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தின் ஒருசிறப்பு வீடியோவை வெளியிட்டனர். இது ரஜினி ரசிகர்ளுக்கு ட்ரீட்டாக அமைந்தது.

18 வயதில் திருமணம் 23 வயதில் விவாகரத்து! கண்ணீர் விட்டு அழுத நடிகை சுலக்சனா!

இப்படம் 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில், ப்ரோமோஷன் பணியை மேற்கொள்ள படக்குழு திமிட்டுள்ள நிலையில், இசைவெளியீட்டு விழாவை நடத்த உள்ளதாம், ஆனால் இந்த முறை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இல்லாமல், ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் டிசம்பர் 21 அன்று நடத்த முடிவு செய்துள்ளதாம்.

ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் குட்டி ஸ்டோரி சொன்னது போல், இந்த முறை கல்லூரியில் நடைபெற இருப்பதால் சற்று வித்தியசமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Recent Posts

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

20 minutes ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

1 hour ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

1 hour ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

10 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

12 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

13 hours ago