‘லால் சலாம்’ இசை வெளியீட்டு விழா! இந்த முறை வேற மாதிரி இருக்கும்…
3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பல வருடங்களுக்குப் பிறகு ,‘லால் சலாம்’ படத்தின் மூலம் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில், இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், படக்குழுவினர் இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில், “லால் சலாம்” படத்தின் டீசர் வெளியானது. மேலும், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று முன்தினம் லால் சலாம் பட தயாரிப்பாளர்கள் படத்தில் இருந்து ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தின் ஒருசிறப்பு வீடியோவை வெளியிட்டனர். இது ரஜினி ரசிகர்ளுக்கு ட்ரீட்டாக அமைந்தது.
18 வயதில் திருமணம் 23 வயதில் விவாகரத்து! கண்ணீர் விட்டு அழுத நடிகை சுலக்சனா!
இப்படம் 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில், ப்ரோமோஷன் பணியை மேற்கொள்ள படக்குழு திமிட்டுள்ள நிலையில், இசைவெளியீட்டு விழாவை நடத்த உள்ளதாம், ஆனால் இந்த முறை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இல்லாமல், ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் டிசம்பர் 21 அன்று நடத்த முடிவு செய்துள்ளதாம்.
ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் குட்டி ஸ்டோரி சொன்னது போல், இந்த முறை கல்லூரியில் நடைபெற இருப்பதால் சற்று வித்தியசமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.