“லால் ரொம்ப மோசமாக நடத்தினார்”! வேதனையில் உண்மையை உடைத்த பெண் இயக்குனர்!
படப்பிடிப்பு தளத்தில் தனக்கு சரியான மரியாதையை லால் வழங்கவில்லை என இயக்குனர் ரேவதி குற்றம்சாட்டியுள்ளார்.
கேரளா : மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து பாலியல் புகார்கள் புயல் போல எழுந்துகொண்டு வருகிறது. அந்த அறிக்கை வெளிவந்ததால் இருந்து நடிகைகள் பலரும் தைரிமாக முன் வந்து தங்களுக்கு நடந்த கொடுமைகளை பற்றி வெளிப்படையாக பேசி புகார் அளித்து வருகிறார்கள். இதற்கு சக நடிகைகளும் தங்களுடைய கௌதுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பிரபல பெண் இயக்குனர் ரேவதி எஸ். வர்மா மலையாள சினிமாவில் எழுந்துள்ள, பாலியல் புகார் பற்றியும், நடிகர் லால் தன்னை மோசமாக நடத்தியதை பற்றியும் பேசியிருக்கிறார். முதலில் லால் குறித்து அவர் குற்றம்சாட்டி இருக்கும் விஷயத்தை பற்றி பார்க்கலாம்.
இயக்குனர் ரேவதி எஸ். வர்மா “MAD DAD” என்கிற படத்தை இயக்கியதன் மூலம் தான் அறிமுகம் ஆனார். இந்த படத்தில் நடிகர் லாலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த, படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் லால் இயக்குனர் ரேவதிக்கு சரியான மரியாதையை கொடுக்கவில்லையாம். ஒரு இயக்குனருக்கு தேவையான மரியாதையை கொடுக்காமல், அவர் மோசமாக நடந்துகொண்டதாகவும் ரேவதி கூறியுள்ளார்.
பெண் இயக்குனர் என்பதால் அவர்கள் சொல்வதை நாம் எதற்காக கேட்கவேண்டும் என்பதற்காக தான் அவர்கள் இப்படி நடந்துகொண்டதாகவும் பேசியுள்ளார். லால் மட்டுமின்றி, அந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்த பெரிய சில பிரபலங்களும் அப்படி தான் நடந்து கொண்டார்களாம்.
ஒரு முறை படத்தின் படப்பிடிப்பின் போது ரேவதி “நான் ஆக்சன் என்று சொல்லும்போது நடிங்கள் கட் சொன்ன பிறகு நாற்காலியில் போய் அமர்ந்துகொள்ளுங்கள் என கூறினாராம். அதற்கு அங்கிருந்த ஒரு பெரிய நடிகர் ஒருவர் “அப்படி நீங்கள் சொல்வதை கேட்பதற்கு டாய்லெட்டில் போய் அமர்ந்துகொள்ளலாம்” என தெரிவித்துவிட்டாராம்.
அவர் ஜாலியாக பேசினாரா அல்லது காயப்படுத்துவற்கு பேசினாரா தெரியவில்லை அந்த நடிகர் அப்படி பேசியவுடன் , இயக்குனர் ரேவதிக்கு ரொம்பவே வேதனையாகிவிட்டதாம். உடனடியாக கோபப்பட்டு படப்பிடிப்பு தளத்தில் மயக்கமும் அடைந்துவிட்டாராம். இத்தனை ஆண்டுகள் ஆகியும் இந்த சம்பவத்தை மறக்கவே மாட்டேன் எனவும் ரேவதி வேதனையுடன் பேட்டியில் குமுறியுள்ளார். நடிகரின் பெயரை சொல்ல மறுத்த காரணத்தால் அவர் ஒரு வேலை லாலாக இருக்குமோ என்ற கேள்வியும் எழும்பியுள்ளது.
மேலும், அந்த பேட்டியில் தொடர்ந்து பேசிய ரேவதி பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள விஷயங்களை பற்றியும் பேசினார். இது தொடர்பாக பேசிய அவர் ” ஹேமா கமிட்டி அறிக்கையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெயரை வெளியிடாதது பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்த அநீதி” எனவும் காட்டத்துடன் பேசினார்.