தமிழ் சினிமாவில் பேய் படங்களை திகில் காமெடி கலந்து அதிரி புதிரி ஹிட்டடித்த திரைப்படங்கள் தான் காஞ்சனா பட வரிசைகள். இந்த படங்களின் கதை ஒன்று போல இருந்தாலும் இந்த படங்களின் திரைக்கதை, காமெடி, செண்டிமெண்ட் என அனைத்தும் சரிவிகிதமாக கலந்து கட்டி ஹிட் கொடுத்துள்ளார் இயக்குனர் நடிகர் ராகவா லாரன்ஸ்.
இந்த படத்தை பாலிவுட்டில் அக்ஷய்குமார் ஹீரோவா நடிக்க லட்சுமி பாம் என்ற பெயரில் ராகவா லாரன்ஸ் இயக்குவதாக இருந்தது. அதன் தொடக்கப் பணிகள் படுவேகமாக நடந்து வந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியானது. தற்போது அந்த போஸ்டர் பற்றி எனக்கு தெரியாது என்னிடம் சொல்லாமல் அந்த போஸ்டர் வெளியாகி உள்ளது, எனவும் அந்தப் படத்தில் இருந்து விலகுவதாகவும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ பணத்தையும் புகழையும் விட, புகழையும் விட தன்மானம் மிக முக்கியமானது. அதனால், லட்சுமி பாம் படத்தில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன். இதற்க்கு நான் யாரையும் குறிப்பிட்டு காரணம் கூற விரும்பவில்லை. நேற்று முன்தினம் வெளியான போஸ்டரின் விவரம் கூட எனக்கு தெரியாது. அதை இன்னொரு மனிதர் என்னிடம் வந்து கூறுகிறார். தன்னுடைய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளதை இன்னொருவர் வந்து கூறுவது நமக்கு எவ்வளவு வலியை தந்திருக்கும் என அப்போது எனக்கு புரிந்தது.
நான் இந்த படத்துக்காக எந்தவித ஒப்பந்தத்திலும் கையெழுத்து போடவில்லை. நான் விரைவில் அக்ஷய்குமாரை நேரில் சந்தித்து அவரிடம் பட ஸ்கிரிப்டை கொடுத்துவிட்டு, இப்படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன். எனக் கூறப்போகிறேன். லட்சுமி பாம் படத்தின் மொத்த டீமுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என அதில் குறிப்பிட பட்டிருந்தது.
DINASUVADU
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஃபெங்கால் புயலாக…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு…
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் எந்த அளவுக்கு அதிரடியாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில்…
புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று…
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று…
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…