லக..லக…விநாயகர் சதுர்த்தி அன்று மிரட்ட வருகிறது ‘சந்திரமுகி-2’….அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

Chandramuki-2 release

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் சந்திரமுகி-2 விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என அறிவிப்பு.

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவி மரியா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படமான சந்திரமுகியின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த சந்திரமுகி திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்ததுடன், சூப்பர்ஸ்டார் ரஜினி இதில் வேட்டையனாகவும், சந்திரமுகியாக ஜோதிகாவும் அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்கள்.

அந்த வகையில் முதல் பாகம் போல் இந்த இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ள நிலையில் சந்திரமுகி-2 விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடா ஆகிய 5 மொழிகளிலும் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்