Laila : லைலாவை டார்ச்சர் செய்த இயக்குனர் பாலா! படப்பிடிப்பில் நடந்த பரிதாப சம்பவம்!

Laila and dir bala

இயக்குனர் பாலா இயக்கும் படங்கள் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டதாக இருக்கும். அவருடைய படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் அவருடைய படங்களில் வரும் கதாபாத்திரங்களும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்றே கூறலாம். அது மட்டுமின்றி பாலா மிகவும் கோபக்காரர் என்பதால் படப்பிடிப்பில் சரியாக நடிக்கவில்லை என்றால் அடிக்க கூட செய்துவிடுவார்.

அவர் படப்பிடிப்பில் இப்படி நடந்துகொள்வதை பாலாவின் படங்களில் பணியாற்றிய பலரும் கூறுவது உண்டு. இருப்பினும் நல்ல நடிகர், நடிகையாக வரவேண்டும் என்பதற்கு தான் பாலா படப்பிடிப்பில் அடித்து தங்களை திருத்துவதாகவுமே பலரும் கூறுவது உண்டு. இந்நிலையில், இயக்குனர் பாலா பிரபல நடிகையான லைலாவை படப்பிடிப்பில் கதறி அழுகவைத்துள்ளாராம்.

நந்தா படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை லைலா மிகவும் வேதனைப்பட்டாராம். குறிப்பாக படத்தின் படப்பிடிப்பு சென்னை  பகுதிகளில் நடைபெற்று வந்தபோது ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தார்களாம். அந்த சமயம் லைலா கண்ணீர் விட்டு அங்கு அழுதாராம். அவருக்கு நெருக்கமானவர்கள் என்ன ஆச்சு எதற்காக கண்கலங்குகிறீர்கள்? என கேட்டுள்ளனர்.

அதற்கு நடிகை லைலா என்னை இயக்குனர் பாலா ரொம்ப டார்ச்சர் பன்றாரு படப்பிடிப்பில் ஒரு சைக்கோ தனமாக அவர் நடந்துகொள்கிறார் என கூறி கண்கலங்கி உள்ளாராம். ஏனென்றால், நடிகை லைலா பம்பாயில் இருந்து வந்தவர் எனவே, நந்தா படத்தில் அவர் ஒரு இலங்கை பெண்ணாக நடிக்கவேண்டும் என்பதால் அந்த படத்தில் நடிக்க அவருக்கு முதலில் சுத்தமாக வரவே இல்லயாம்.

இயக்குனர் பாலாவும் படத்தின் கதை இது தான் இந்த மாதிரி கதாபாத்திரத்தில் தான் நீங்கள் நடிக்கவேண்டும் என்று கூறவில்லையாம். லைலாவை படப்பிடிப்புக்கு வர சொல்லவிட்டு அங்கிருந்து நடந்துவா இங்கு இருந்து வா என படப்பிடிப்பு நடத்தினாராம். சரியாக நடிக்கவில்லை என்ற காரணத்தால் லைலாவை அவர் திட்டியும் உள்ளாராம். இதனால் மனமுடைந்துபோன லைலா கதறி அழுதாராம். இந்த தகவலை பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். என்னதான் திட்டி வாங்கி கண்கலங்கினாலும் நடிகை லைலா நந்தா படத்தில் அருமையாக நடித்திருப்பார் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்