20 லட்சம் நிதியுதவி வழங்கிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா!
கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோயானது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள், படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, fefsi தொழிலாளர்களுக்கு உதவுமாறு சங்கம் கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, பெப்சி தொழிலாளர்களுக்காக ரூ.20 லட்சத்தை நிதியுதவியாக வழங்கியுள்ளார். இதற்க்கு முன் சினிமா பிரபலங்கள் பலர் நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.