தெலுங்கு படத்தில் போலீஸ் அதிகாரியாக களமிறங்கும் லேடி சூப்பர் ஸ்டார்!
நடிகை நயன்தாரா பிரபமான இந்திய நடிகையாவார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்திலும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், பாகுபலி திரைப்படத்தில் நடித்து பிரபலமான ராணா தயாரிக்கும், புதிய தெலுங்கு படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகை நயன்தாரா போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளாராம்.
முதலில் கீர்த்தி சுரேசை தான் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க அணுகியுள்ளனர். ஆனால், படக்குழுவினர் கேட்ட தேதிகளை ஒதுக்க முடியாமல் போய்விட்டது. இதனையடுத்து நடிகை நயன்தாராவை தேர்வு செய்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.