கடைசி நேரத்தில் ஏமாற்றம்.. ஆஸ்கர் ரேசிலிருந்து விலகிய ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம்.!
ஆஸ்கர் விருதுக்கான போட்டியிலிருந்து வெளியேறியது 'லாப்பட்டா லேடீஸ்' திரைப்படம்.
டெல்லி: 97 வது ஆஸ்கர் விருதுக்கு, சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான பிரிவு போட்டியிலிருந்து ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம் வெளியேறியது. திருமணம் ஆகி ஊருக்கு செல்லும் ஹீரோ தவறுதலாக மனைவி என நினைத்து வேறு பெண்ணை அழைத்து செல்ல பின் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை.
எதார்தமான காட்சிகள் மூலம் நம்மை இந்த படத்தோடு ஒன்ற வைத்து இருக்கிறார்கள். 2025 ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுப் பட்டியலில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட பிரிவில் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்த (லாபத்தா லேடீஸ) “Laapataa Ladies” திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 15 படங்களில் இடம்பெறவில்லை.
இதனை, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும், இந்தியாவைப் பற்றிய மற்றொரு படமான, பிரிட்டிஷ் – இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சந்தியா சூரியின் ”சந்தோஷ்” படம் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
ஆஸ்கார் 2025 குறுகிய பட்டியல்:
- பிரேசில் – நான் இன்னும் இங்கே இருக்கிறேன்
- கனடா – உலகளாவிய மொழி
- செக் குடியரசு – அலைகள்
- பாலஸ்தீனம் – கிரவுண்ட் ஜீரோவிலிருந்து
- செனகல் – டஹோமி
- தாய்லாந்து – பாட்டி இறப்பதற்கு முன் மில்லியன்களை சம்பாதிப்பது எப்படி
- ஐக்கிய இராச்சியம் – சந்தோஷ்
- டென்மார்க் – ஊசியுடன் கூடிய பெண்
- பிரான்ஸ் – எமிலியா பெரெஸ்
- லாட்வியா – ஓட்டம்
- நார்வே – அர்மான்ட்
- ஜெர்மனி – புனிதமான படம்
- ஐஸ்லாந்து – டச்
- அயர்லாந்து – நீகேப்
- இத்தாலி – வெர்மிக்லியோ
லாபத்தா லேடீஸ்
இயக்குநர் கிரண் ராவ் இயக்கி ஹிந்தியில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான இப்படத்தில் நிதான்ஷி கோயல், பிரதிபா ரந்தா, ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா, சாயா கடம் மற்றும் ரவி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அமீர்கான் புரொடக்ஷன்ஸ், கிண்ட்லிங் பிக்சர்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் கீழ் அமீர்கான், கிரண் ராவ் மற்றும் ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர் .