சென்னை : தொடர்ச்சியாக திரில்லர் கதை கொண்ட படங்களில் நடித்து வருவதால் என்னவோ நடிகர் அருள்நிதிக்கு அந்த மாதிரி படங்களில் நடிக்க தான் வாய்ப்புகள் அதிகமாக வந்துகொண்டு இருக்கிறது. இப்படியான படங்களில் அவர் நடிப்பதன் காரணமாக அவரை பார்ப்பவர்களுக்கு கூட அவர் கொஞ்சம் கோபம் கொண்ட ஆள் என்று திகில் பார்வையுடன் பார்ப்பது என்பது சகஜம் தான்.
அப்படி படம் பார்க்கும் மக்கள் தான் இருக்கிறோம் என்றால் அவருடைய வீட்டில் இருப்பவர்கள் கூட அருள்நிதியை பார்த்து மிகவும் பயப்படுகிறார்களாம். நடிகர் அருள்நிதியின் உறவினர் ஒருவர் ஊரில் இருந்து வந்து அவருடைய பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருந்தாராம். அப்போது அருள் நிதி வீட்டில் இருந்து வெளியே வந்தாராம்.
இதனை கவனித்த அவருடைய உறவினர் அவருடைய குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் போது மாமா வாராரு பாரு என்று பயம் காட்டி குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவாராம். அதைப்போல, அருள்நிதி வீட்டில் இருக்கும்போது அவருடைய மனைவி அவரிடம் நான் இந்த இடத்திற்கு சென்று வருகிறேன் என்பது போல சொல்வாராம்.
அப்போது அருள்நிதி சரி சரி போயிட்டு வா என்று கூறுவாராம். பின் அவருடைய மனைவி அதனை எதற்கு படத்தில் வருவது போல இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டாராம். என்னுடைய வீட்டில் இப்படி கேட்பதால் என்னடா? படத்தில் அப்படி நடிப்பதால் நாம் அப்படியே நிஜ வாழ்க்கையிலும், மாறிவிட்டோமோ என்கிற எண்ணம் எனக்கு அடிக்கடி தோணும் எனவும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார் அருள் நிதி.
இருந்தாலும் கூட, அப்படியான நல்ல கதைகள் கொண்ட த்ரில்லர் படங்கள் வந்தால் தொடர்ச்சியாக நடிப்பேன்…அடுத்ததாக குடும்ப கதை ஒன்றை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் நடிக்கிறேன் எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார். அவர் நடித்து இருக்கும் டிமாண்டி காலாணி 2 வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அருள் நிதி பேசியுள்ளதை பார்த்த ரசிகர்கள் த்ரில்லர் படத்தில் நடிக்கிறது குத்தமா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…