நிறைவேறியது குப்பத்து ராஜா படத்தின் படப்பிடிப்பு !

Default Image

ஜி.வி.பிரகாஷ் குமார் ‘நாச்சியார்’ படத்திற்கு பிறகு ஹீரோவாக கைவசம் ‘அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல், கோபம், ரெட்டை கொம்பு, கோபி நயினார் படம், வசந்தபாலன் படம்’ என அடுத்தடுத்து படங்கள் வண்டிகட்டி நிற்கிறது. இதில் ‘குப்பத்து ராஜா’ படத்தை பிரபல நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கி வருகிறார். ‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா, பல்லக் என டபுள் ஹீரோயின்ஸாம்.

முக்கிய வேடத்தில் இயக்குநர் பார்த்திபன் நடிக்கிறார். ஜி.வி.யே இசையமைத்து வரும் இதற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘S ஃபோக்கஸ்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, வெற்றிகரமாக படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதை ‘S ஃபோக்கஸ்’ நிறுவனமே தங்களது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டியதோடு, ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களையும் ஷேரிட்டு உறுதிபடுத்தியுள்ளது. படத்தை மே மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்