தமிழ் சினிமாவில், மிருகம் பாத்தின் மூலம் அறிமுகமான ஆதிக்கும், டார்லிங் படம் மூலம் அறிமுகமான நிக்கி கல்ராணிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தமிழில் யாரையும் அழைக்காமல் தெலுங்கில் முக்கியமானவர்கள் மட்டும் அழைத்து இவர்களது நிச்சயதார்த்தம் ரகசியமாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நடிகை நிக்கி கல்ராணி நிச்சயதார்த்தம் முடிந்த நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளபக்கங்களில் “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொண்டோம். இப்போது அதிகாரபூர்வமாக நிச்சயம் செய்துகொண்டுள்ளோம். 24.03.2022… இந்த நாள் எங்கள் இருவருக்கும் மிகச் சிறப்பு வாய்ந்தது. எங்கள் இரு வீட்டாரும் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளோம்.” என பதிவிட்டிருந்தார்.
இவர்களது நிச்சியத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலானது. இந்த நிலையில், தற்போது நடிகர் ஆதி ட்வீட்டர் பக்கத்தில் நிச்சியத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். வீடியோவில் இருவரும் சந்தோசமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஆதி தற்போது லிங்குசாமி இயக்கும் “வாரியர்” படத்தில் வில்லனாகவும், ஹன்சிகா, யோகிபாபு, ரோபோ சங்கருடன் “பார்ட்னர்” என்ற நகைச்சுவை படத்திலும் நடிக்கிறார். நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள இடியட் திரைப்படம் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…