“ஒரு குடும்பஸ்தன் உருவாவது எப்படி?” கலக்கலாக வெளியான மணிகண்டனின் புதுப்பட ட்ரைலர் இதோ…
ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள ‘குடும்பஸ்தன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு படத்தை கொடுக்க ரெடியாகி இருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். எதற்காக இப்படி சொல்கிறோம் என்றால் குட் நைட் படத்தை போலவே குடும்ப கதையை வைத்து அவர் அடுத்ததாக நடித்துள்ள குடும்பஸ்தன் படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது.
அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி என்பவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஒரு குடும்பஸ்தன் உருவாவது எப்படி அவன் சந்திக்கும் சிரமங்கள் என்னென்ன என்பதை வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது என வெளியாகியுள்ள டிரைலரை பார்க்கும்போது நமக்கு தெரிகிறது.
வழக்கமாக நம்மளுடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டது போல இருந்தாலும் கூட அதனை நகைச்சுவையாக நம்மளுக்கு எப்படி காட்டமுடியுமோ அப்படியே கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி. திருமணம் முடிந்த பிறகு வேலை இல்லாமல் செலவுக்கு கடன் வாங்கும் ஹீரோ மணிகண்டன் தன்னுடைய தந்தையிடம் உண்மையை கூறுகிறார்.
அதன்பிறகு அதனை சுற்றியும் கதைக்களம் நகர்வதை நாம்மால் டிரைலரில் பார்க்க முடிகிறது. குடும்பஸ்தனாக மாறிய மணிகண்டன் தன்னுடைய வாழ்க்கையில் பிரச்சினைகளை கடந்து கடைசியில் தன்னுடைய வாழ்க்கையில் வெற்றிபெற்றாரா? என்பது தான் படத்தின் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரைலர் பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டிப்பாக இந்த படம் குட் நைட் போல மணிகண்டனுக்கு பெரிய வெற்றி படமாக அமையும் என பாராட்டி வருகிறார்கள்.