கணவர் சம்பாத்தியத்தில் படத்தை தயாரித்த கே.ஆர்.விஜயா! கடைசியில் கம்பெனியை மூடிய கதை!
தமிழ் சினிமாவில் “கற்பகம்” எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கே.ஆர்.விஜயா. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவள் சுமங்கலிதான், எதிரொலி, தங்கை, நெஞ்சிருக்கும் வரை, தங்கப்பதக்கம், கந்தன் கருணை உள்ளிட்ட பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுடன் ஜோடியாக இவர் நடித்துள்ளார்.
1960, 70, 80 ஆகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் கொண்டிருந்த இவர் பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்துகொண்டு இருக்கிறார். முன்னணி நடிகையாக வளரும் போது அதாவது கடந்த 1966-ஆம் சினிமா பைனான்சியர் வேலாயுத நாயர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
அந்த ஒரு காட்சியால் சினிமா தேவையானு அழுதேன்! ‘வீர திருமகன்’ படத்தால் நொந்துபோன சச்சு!
திருமணத்திற்க்கு பிறகும் சினிமாவை விட்டு விலகாமல் நடிகை கே.ஆர்.விஜயா நடித்து வந்தார். பிறகு பட வாய்ப்புகள் குறைந்தவுடன் படங்களை தயாரிக்க தொடங்கினாராம். தனது கணவர் சினிமா பைனான்சியர் என்ற காரணத்தால் சம்பாதித்த பணத்தை படம் தயாரித்து அதில் வரும் லாபங்களை வைத்து அடுத்தடுத்த படங்களை தயாரிக்கலாம் என திட்டமிட்டுருந்தாராம்.
திட்டமிட்ட படி தொடர்ச்சியாக அவர் படங்களை தயாரிக்கவும் செய்தார். இதில் தொடர்ச்சியாக அவர் தயாரித்த 6 திரைப்படங்கள் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றதாம். இதன் மூலம் நல்ல லாபமும் கிடைத்ததாம். பிறகு 7-வாதாக அவர் தயாரித்த படம் சரியான வெற்றியை பெறவில்லையாம். இதனால் அந்த சமயம் கே.ஆர்.விஜயா மிகவும் வருத்தத்தில் இருந்தாராம்.
சரியில்லனா கிளம்பிவிடுவார்..ராதிகா ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்படி பட்டவரா?
கடைசியாக தயாரித்த அந்த ஒரு திரைப்படத்தின் தோல்வி காரணமாக கே.ஆர்.விஜயா தனது தயாரிப்பு கம்பெனியை இழுத்து மூடிவிட்டாராம். இந்த தகவலை நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் நடிகை கே.ஆர்.விஜயா கடைசியாக இந்த ஆண்டு வெளியான “ராயர் பரம்பரை” திரைபடத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.