காஞ்சனா 4 : ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து மக்கள் பணிகளை மேற்கொண்டு வரும் kpy பாலாவுக்கு ‘காஞ்சனா’ 4 படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக கேள்வி எழுப்பிய நிலையில், நச்சென்று பதில் அளித்துள்ளார்.
கலக்க போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான பாலா, இந்த நிகழ்ச்சியின் மூலம் kpy பாலா என்ற புகழை பெற்று கொண்டார். பின்னர், குக் வியஹ் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அவர், தற்பொழுது வெள்ளித்திரையிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
பாலா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி சிரிப்புக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். இப்படி, பாலா ஒரு நடிகர் மட்டுமல்ல சமூக நலனில் அக்கறை கொண்டவர். தான் சம்பாதிக்கும் சிறு வருமானத்தில் கூட, பாதியை ஏழைகளுக்கு உதவுவதற்காக செலவிட்டு வருகிறார்.
அந்த வரிசையில், இலவச ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்துள்ளார், சமீபத்தில் நல்ல குடிநீர் கிடைக்காமல் தவித்து வரும் கிராமத்திற்கு தனது சொந்த செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கொடுத்தார் இவ்வாறு பல உதவிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். சொல்லப்போனால் இப்பொழுது, மாஸ்டர் ராகவா லாரன்ஸ் உடன் கைகோர்த்து பெரும் உதவிகளை செய்து வருகிறார்கள்.
சமீபத்தில், ஒரு ஹோட்டல் திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாலா, பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது, அவரிடம் காஞ்சனா நான்காம் பாகத்தில் நீங்கள் எந்த கேரக்டரில் நடிக்கிறீர்கள்? என்ற செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த பாலா “காஞ்சனா 4 லாரன்ஸ் அண்ணா படம், அது அண்ணா தான் சொல்லணும், அதுல எனக்கு தெரியல சார். மேலும் படத்தில் பேயாக வாருவீர்களா என்று கேட்டதற்கு, முடிந்தால் தியேட்டருக்கு டிக்கெட் எடுத்து ‘காஞ்சனா 4’-ஐ முதல் ஆளாக பார்க்க வேண்டும்” என நக்கலாக பதில் கூறினார். மேலும், தான் செய்து உதவிகளை பலர் பல விதமாக பேசுகிறார்கள். அதை பற்றி நான் கண்டுகொள்ளவில்லை. நான் இதனை மேலும் சிறப்பாக செய்து கொண்டு இருப்பேன் என்றார்.
முன்னதாக, காஞ்சனா 4 படத்தின் அறிவிப்புகள் அனைத்தும் வதந்திகள். ராகவேந்திரா புரொடக்ஷன் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தள வாயிலாக தெரிவித்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…