KPY Bala - Raghava Lawrence [File Image]
KPY – Lawrence: அரசு பள்ளியில் கழிப்பறை வசதி ஏற்படுத்த நிதி வழங்கி உதவிய ராகவா லாரன்ஸ் மற்றும் பாலா.
நடன இயக்குனர் ராகவா லாரன்ஸும் KPY பாலாவும் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக ரூ.15 லட்சம் செலவில் கழிப்பறை வசதி அமைக்க உதவி செய்துள்ளனர்.
விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் பாலா. இதனை தொடர்ந்து அவரை kpy பாலா என்று அழைக்கப்பட்டார். kpy-க்கு பின் குக் வித் கோமாலி நிகழ்ச்சியில் பங்கேற்று, அதில் தனது அட்டகாசமான நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தார்.
இதன் பின் அவருக்கு படிப்படியாக பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இவர், சின்னத்திரையில் சம்பாதித்த பணத்தில் மக்களுக்காக பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வருகிறார். ஆம்புலன்ஸில் தொடங்கி சமீபத்தில் கூட, சைக்கிள் கூட இல்லாமல் தவித்த பெட்ரோல் நிலையத்தில் பணி புரிந்து வந்த ஊழியர் ஒருவருக்கு பைக்கை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
அது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இவ்வாறு, மக்களுக்கு நல்ல காரியங்களை செய்து வரும் kpy பாலாவிடம், திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு மேல்நிலைப்பள்ளிலிருந்து உதவி குரல் வந்துள்ளது.
இதனை கையில் எடுத்த பாலா தன்னால் முடிந்த அளவு பணம் ரூ.5 லட்சத்தை ரெடி செய்துவிட்டு, இந்த உதவியை யாரை பார்த்து செய்து வந்தாரோ அதாவது ராகவா லாரன்ஸிடம் மீதமுள்ள பணத்திற்கு உதவியை நாடியுள்ளார்.
உடனே, ராகவா லாரன்ஸிடம் பாலா உதவி கேட்க கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒகே என கூறிவிட்டு உதவி செய்ய முன் வந்துள்ளார். இப்பொழுது, 15 லட்சம் ரூபாயை அந்த பள்ளிக்கு கொடுத்து உதவியை செய்ய முன் வந்துள்ளனர். இவர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…