ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

ரஷ்யாவின் Amur Autumn சர்வதேச திரைப்பட விழாவில், சூரியின் 'கொட்டுக்காளி' திரைப்படம் GRAND PRIX AWARD வென்றது.

Kottukkaali won the GRAND PRIX AWARD

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள “கொட்டுக்காளி” திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும் பாராட்டுகளை தாண்டி விருதுகளை குவித்து வருகிறது.

தற்பொழுது, ரஷ்யாவில் கடந்த 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெற்ற 22வது ’Amur Autumn’ சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் சூரி மற்றும் நடிகை அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் GRAND PRIX AWARD விருதை வென்றது.

இதனை நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன், தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸின் கீழ், இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த இன்பச் செய்தியை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

ரஷ்யாவில் நடைபெற்ற ‘Amur Autumn’ சர்வதேச திரைப்பட விழாவில், பேசிய இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் தமிழில் பேசி அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார். முன்னதாக, போர்ச்சுகல் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான கோல்டன் லின்க்ஸ் விருதை வென்றது.

அதுமட்டுமல்லாமல், பெர்லின் சர்வதேச திரைப்பட விழா மற்றும் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றில் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்