கொட்டுக்காளி படத்தை ஓடிடியில் பார்க்க ரெடியா? வந்தது ரிலீஸ் தேதி!!

கொட்டுக்காளி திரைப்படம் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி Simply South ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Kottukkaali

கொட்டுக்காளி படம் தனியாக ரிலீஸ் ஆகி இருந்தால் கூட மக்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப்பெற்று இருக்கும் என்றே சொல்லலாம். ஏனென்றால், இந்த படம் வித்யாசமான கதைக்களத்தை வைத்து உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் , 74-வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டு அங்கு பாராட்டுகளை பெற்று இருந்தது.

இப்படி சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒளிபரப்பு செய்யப்பட்ட காரணத்தால் கொட்டுக்காளி படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. இருந்தாலும், பல தரமான படங்களை கொடுத்த அனுபவம் கொண்ட இயக்குநர் அமீர் சொன்னது போல கொட்டுக்காளி படத்தினை திரையரங்குகளுக்குக் கொண்டு வராமல் ஓடிடியில் விற்பனை செய்திருக்கலாம்.

அதற்கு முக்கியமான காரணமே கொட்டுக்காளி படம் திரையரங்குகளுக்கான படம் இல்லை விருது விழாக்களுக்கு அனுப்பப்பட வேண்டிய ஒரு நல்ல படம் என்பதால் தான். இதனை யோசிக்காமல் படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் படத்தினை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழைபடத்துடன் போட்டியாக ரிலீஸ் செய்தார்.

இதில், வாழை திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கொட்டுக்காளி படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில், படத்தை திரையரங்குகளில் பார்க்க தவறிய ரசிகர்கள் கொட்டுக்காளி எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்தார்கள்.

இந்த சூழலில், தற்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படம் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி Simply South ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. எனவே, படத்தை திரையரங்குகளில் பார்க்க தவறியவர்கள் செப்டம்பர் 27-ஆம் தேதி ஓடிடியில் பார்த்துக்கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்