ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலா.? மிரட்டு போன கோலிவுட்.!!
ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் படத்தை பற்றி தான் இப்போது வரை அனைவரும் பேசி வருகிறார்கள். படத்தில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு காட்சியையும் லோகேஷ் கனகராஜ் செதுக்கியிருப்பார். அதைபோல் படத்தில் நடித்த கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த சூர்யா என அனைவர்களும் தங்களது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள்.
இவர்களின் நடிப்புக்கு இணையாக, இசையில் அனிருத்தும் மிரட்டி இருந்தார் என்றே கூறலாம். அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட இந்த படம் வெளியான ஒரு வாரமாக பலத்த விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.
இந்த படம் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து பார்க்கையில், படம் உலகம் முழுவதும் 500 கோடிகளை தாண்டிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வெளியான ஒரு வாரத்தில் தமிழகத்தில் 100 கோடி வசூலை கடந்துவிட்டது.
இந்நிலையில், உலகம் முழுவதும் வெளியான 7 நாட்களில் இந்த திரைப்படம் எத்தனை, கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் இந்த படம் 260 கோடிக்கு மேல் வசூல் செய்யுள்ளதாம்.
மேலும், இந்த வருடம் வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையும் விக்ரம் படம் படைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் திங்கள் கிழமைக்குள் 300 கோடி வசூலை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.