பிரபல கோலிவுட் நடிகையை ஓடும் ரயிலில் மானபங்கப்படுத்த முயற்சி!

Default Image

மலையாள நடிகை சனுஷாவை  ஓடும் ரயிலில் மானபங்கப்படுத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related image

ரேணிகுண்டா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனுஷா சந்தோஷ். இவர் கேரள மாநிலம் கன்னூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாவலி விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார். பயணத்தின் போது ஆன்டோ போஸ் என்ற நபர் தம்மை மானபங்கம் செய்து விட்டதாக புகார் கூறியுள்ளார். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது, தமது உதட்டின் மீது யாரோ கைவைப்பதை உணர்ந்து திடுக்கிட்டு விழித்துப் பார்த்ததாகவும், அப்போது, அருகே பயணித்துக் கொண்டிருந்த ஆன்டோ போஸ் என்ற நபர் தமது உதடுகள் மீது கைவைத்திருந்தது தெரிய வந்ததாகவும் கூறியுள்ளார்.

Related image

இதையடுத்து, அந்த நபரின் கைகளைப் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டபடியே விளக்குகளைப் போட்டதாகவும், ஆனால் அருகில் பயணித்த யாருமே தமக்கு உதவ முன்வரவில்லை என்றும் நடிகை சனுஷா சந்தோஷ் தெரிவித்துள்ளார். மற்றொரு பெர்த்தில் படுத்திருந்தவர், சம்பவத்தின் போது கண் விழித்து பார்த்துவிட்டு, எந்த எதிர்வினையும் செய்யாமல் அமைதி காத்ததாகவும் சனுஷா கூறியுள்ளார்.

Related image

சிறிது நேரம் கழித்து அதே பெட்டியில் பயணித்த எழுத்தாளர் உன்னி உள்ளிட்டோர் பயணச்சீட்டு பரிசோதகரை அழைத்து வந்து மானபங்கம் செய்ய முயன்ற நபரை திருச்சூர் ரயில் நிலையத்தில் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மானபங்கப் படுத்திய நபர் தம்மை விட்டு விடும்படி கெஞ்சியதாகவும், எனினும், தவறு செய்த அந்த நபர் சட்டப்படி தண்டிக்கப்படுவதோடு, அவர் யார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக துணிந்து புகார் கொடுத்துள்ளதாகவும் சனுசா கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pradeep ranganathan dragon AJITH
tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi