கோபத்தில் சீரும் பிக்பாஸ் போட்டியாளர்கள்….!!! என்ன நடக்க போகிறது?
பிக்பாஸ் வீட்டில் யார் ஜெயிப்பார்கள் என்று ரசிகர்களிடம் கேட்டால் ஒரு பதிலும் வராது. முதல் சீசனை போல இரண்டாவது சீசனில் யார் ஜெயிப்பார்கள் என்று கணிக்க முடியவில்லை.
காலையில் வந்த புதிய புரோமோவில் ஐஸ்வர்யா வழக்கம் போல் எல்லோரிடமும் சண்டை போட்டார். அடுத்து வந்த வீடியோவில் பிக்பாஸ் ஜெயிக்க யார் தகுதியானவர்கள் என்று நிரூபிக்க சொல்கிறார்.
இதனால் போட்டியாளர்களுக்குள் ஒரு பேச்சு வார்த்தை நடக்கிறது. அதில் ஜனனி ஒன்று சொல்ல யாஷிகா உங்களை விட பிக்பாஸ் ஆரம்பத்தில் இருந்து அதிக போட்டிகள் செய்தது நான் தான். பிக்பாஸ் பட்டம் பெற நான் தகுதியானவன் என்று கூறுகிறார்.
அதை கேட்டதும் ஜனனி கோபமாக அந்த இடத்தில இருந்து வெளியேறுகிறார்.