சிக்கலில் இருக்கிறதா சிவகார்த்திகேயனின் அயலான்? தயாரிப்பு நிறுவனம் கொடுத்த விளக்கம்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அயலான். இந்த திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், சிஜி வேலைகள் முடியாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றுகொண்டே இருந்தது. பிறகு சிஜி வேலைகள் எல்லாம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. இதற்கிடையில், அயலான் படம் சிக்கலில் இருப்பதாகவும், அந்த சிக்கலில் இருந்து சிவகார்த்தியன் மீளமுடியாமல் தவித்து வருவதாகவும், செய்திகள் வெளியானது.
கண்ணீர் விட்டு கதறல்! மனிஷா யாதவை டார்ச்சர் செய்த பிரபல இயக்குனர்?
ஆனால், இந்த செய்தி எல்லாம் வெறும் வந்தது என்றும் படத்திற்கு எந்த சிக்கலும் இல்லை என்றும் படத்தை விநியோகம் செய்யும் தயாரிப்பு நிறுவனம் கேஜேஆர் ஸ்டுடியோஸ் விளக்கம் கொடுத்துள்ளது. ‘அயலான்’ திரைப்பட வெளியீட்டில் சிக்கல் இருப்பதாக வெளியான தகவல் எல்லாம் பொய்யான செய்தி.
ஒரு திரைப்படத்தின் முக்கிய செய்தியை எதில் ஊடகப்படுத்த வேண்டும் என்ற சுதந்திரமும், உரிமையும் அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடையாதா? இதற்காக அந்த திரைப்படத்தை பற்றி வதந்தி பரப்புவது ஒருவித வன்முறை ஆகாதா? இதுபோன்ற கீழ்மையான செயலை இனிமேலும் எந்த திரைக் கலைஞர்களுக்கும், திரைப்படங்களுக்கும் செய்யாமல் இருக்குமாறும் வதந்தி தகவலை பரப்புவர்களுக்கு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
மேலும், இந்த அயலான் திரைப்படம் ஏலியனை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. படத்தில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், ஷரத் கேல்கர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.