Priya Bhavani Shankar [file image]
சென்னை : சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பொறுத்தவரை தன்னுடைய தனிப்பட்ட விஷயங்கள் அதாவது காதலிப்பவர்கள் பற்றிய விஷயங்களை வெளிப்படையாக சொல்வது இல்லை. ஆனால், அந்த விஷயத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் வெளிப்படையாகவே தான் சிறிய வயதில் இருந்து ராஜ் என்பவரை காதலித்து வருகிறேன் என்பதை அறிவித்து விட்டார்.
தன்னுடைய காதலர் இவர் தான் என்று பிரியா பவானி சங்கர் கூறினாலும் கூட சமூக வலைத்தளங்களில் அவரை பற்றிய கிசு கிசுக்கள் வராமல் இருந்ததே இல்லை என்று கூட சொல்லலாம். அப்படி பரவும் கிசு கிசுக்களையும் பிரியா பவானி சங்கர் கவனித்து கொண்டு தான் இருக்கிறாராம். உதாரணமாக ஹரிஷ் கல்யாணுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னால் அவருடன் காதல்? என்று எழுதி விடுகிறார்களாம்.
அதைபோல, அசோக் செல்வனுடன் பிரியா பவானி சங்கர் படங்களில் ஒன்றாக நடித்து இருக்கிறார். அது மட்டுமின்றி, பிரியா பவானி சங்கர் காதலித்து வரும் ராஜ் மற்றும் அசோக் செல்வன் இருவரும் நெருங்கிய நண்பர்களாம். ஒரு முறை அசோக் செல்வனுக்கும் பிறந்த நாள் வாழ்த்து பிரியா பவானி சங்கர் தெரிவித்த போது ராஜை கழட்டிவிட்டு அசோக் செல்வனுடன் பிரியா பவானி சங்கர் காதல் என்பது போல எழுதினார்களாம்.
அபப்டி எழுதிய அந்த செய்தியை பிரியா பவானி சங்கர், அவருடைய காதலர் ராஜ் மற்றும் நடிகர் அசோக் செல்வன் அதிர்ச்சியாக பார்த்து என்ன இப்படி எல்லாம் சொல்றாங்க என்பது போல பார்த்தார்களாம். இந்த தகவலை சமீபத்தில் டிமாண்டி காலனி 2 படத்தின் ப்ரமோஷனுக்காக கலந்து கொண்டபோது சென்னையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் பேசியுள்ளார்.
அந்த பேட்டியில் பேசிய அவர் ” என்னை பற்றிய வதந்தியான கிசு கிசுக்களை தயவு செய்து தவறாக விஷயங்களை எழுதாதீர்கள். நானும் என்னுடைய காதலர் ராஜ் இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம். இப்போது கொஞ்சம் சோம்பேறியாக இருப்பதன் காரணத்தால் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறோம். கண்டிப்பாக, அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளவேன்” எனவும் தெரிவித்துள்ளார். காதல் வாழ்க்கையை திருமண வாழ்க்கையாக மாற்ற முடிவெடித்துள்ள பிரியா பவானி சங்கருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…