HBDVigneshShivan : கணவருக்கு முத்தமழை! குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன்!

WIKKI AND NAYAN

இயக்குனரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இன்று தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் மூலமும் நேரில் சென்றும் தெரிவித்து வருகிறார்கள்.

HBDVigneshShivan
HBDVigneshShivan (@Nayanthara)

இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தன்னுடைய பிறந்த நாளை தனது மனைவி மற்றும் தனது குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார். இன்று தனது ஆசை கணவர் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு முத்தமாக கொடுத்துக்கொண்டு முத்தமழை பொழிந்து நயன்தாரா தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

HBDVigneshShivan
HBDVigneshShivan (@Nayanthara)

இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன்  மனைவி நயன்தாரா தன்னுடைய இரண்டு குழந்தைகள் என குடும்பமாக கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த பலரும் இன்று போல் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என கூறி வருகிறார்கள்.

HBDVigneshShivan
HBDVigneshShivan (@Nayanthara)

மேலும், இன்று காலையிலே  தனது மனைவி நயனுடன் நீச்சல் குளத்தில் விக்னேஷ் சிவன் ஜாலியாக குளித்து கொண்டு அந்த அழகிய தருணத்தின் புகைப்படம் எடுத்து வெளியீட்டு இருந்தார்.  இந்த ரொமான்டிக் புகைப்படம் காலையில் இருந்தே மிகவும் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்