குஞ்சலி மரக்கார் வேடத்தில், மோகன்லால் நடிக்கிறார். அவருடைய இளம் வயது கதாபாத்திரத்தில், மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபு நடிக்கிறார். ‘சிறைச்சாலை’ படத்துக்குப் பிறகு 22 வருடங்கள் கழித்து மோகன்லால் – பிரபு இருவரும் இந்தப் படத்தின் மூலம் இணைந்து நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘சண்டக்கோழி 2’, ‘சர்கார்’ ஆகிய படங்களில் பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், மலையாளத்தில் தன்னை அறிமுகப்படுத்தியவர் பிரியதர்ஷன் என்பதால், அவர் கேட்டதும் மறுக்காமல் ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் படத்தில் அவர் சீன நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.மலையாள சினிமாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் தயாராக இருக்கிறது.
DINASUVADU