இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து கிண்டல் செய்தவர்களை விளாசிய நடிகை ஸ்ரீ பிரியா
இலங்கையில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நடை பெற்றது.இந்த சம்பவம் நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் இலங்கையில் உள்ள ஹோட்டல் மற்றும் தேவாலயங்களை குறிவைத்து நடந்ததாக கூறபடுகிறது.இந்த தாக்குதலில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தை குறித்து நடிகை ஸ்ரீ பிரியா, ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார்.அந்த பதிவை பார்த்து சில மர்ப நபர்கள் அவரை கேலி செய்துள்ளார்கள்.
தற்போது அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ” இலங்கை சம்பவத்தை பற்றி வருத்தத்தை தெரிவிக்கும் tweetற்கு சம்மந்தமில்லாத கிண்டல் மற்றும் கேவலமான comment களை பதிவு செய்யும் மனிததன்மைக்கு எதிரானவர்களை மகிழ்ச்சியுடன் நான் block செய்வேன் ” என்று ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.