மகிளிமஞ்சரோ…மலை கனிமஞ்சரோ! மாசாய் பழங்குடியினருடன் பாட்டு பாடிய சின்மயி…
எந்திரன்’ படத்தில் வரும் ‘கிளிமஞ்சரோ’ பாடலை ஆப்ரிக்காவை சேர்ந்த மாசாய் பழங்குடியின மக்களுடன் இணைந்து பாடிய பாடகி சின்மயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2010-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டது. அது மட்டும் இல்லை குறிப்பாக, அந்த படத்தில் இடம்பற்றுள்ள ‘கிளிமாஞ்சாரோ’ என்ற பாடல், பாடகி சின்மயி குரலில் பழங்குடியினரின் நடனத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த நிலையில், 2010ல் வெளிவந்த அந்த பாடலை மீண்டும் ரீல்ஸாக ரீ கிரியேட் செய்துள்ளார் போல் தெரிகிறது. ஆம்… தற்போது சின்மயி தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில், மசாய் பழங்குடியின மக்களுடன் இணைந்து ‘கிளிமாஞ்சாரோ’ பாடலை சின்மயி பாடி மகிழ்ந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
அந்த வீடியோவில், கிளிமாஞ்சாரோ என்று சின்மயி பாட அதன் பின்னரே மசாய் பழங்குடியின மக்கள் கோரஸாக சத்தம் எழுப்புகிறாரக்ள். வீடியோ பாக்கவே அருமையாக இருக்கிறது என பார்வையாளர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.
சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த சஞ்சய் பட பூஜை! மகனுக்காக கலந்துகொள்ளாத விஜய்?
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தப் பாடலை பா.விஜய் எழுதியுள்ளார், ஜாவேத் அலி மற்றும் சின்மயி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர் பெரு நாட்டில் உள்ள மச்சு பிச்சுவில் இந்த பாடலின் படப்பிடிப்பு நடந்தது. இந்த பாடல் மாபெரும் வரவேற்ப்பை பெற்ற நிலையில், அதே பெயரில் ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் அந்த பாடல் வெளியிடப்பட்டது.