புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? இசையமைப்பாளராக கலக்கிய கதீஜா ரஹ்மான்!
சென்னை : இசை புயல் அதாவது அவருடைய ரசிகர்கள் அன்போடு அவரை அழைக்கும் ‘பெரிய பாய்’ ஏ.ஆர். ரஹ்மான் 32 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பல படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்து கொண்டு வருகிறார். காலங்கள் கடந்து எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தாலும் கூட இன்றும் இளைஞர்கள் அவருடைய பாடலை முணுமுணுத்து கொண்டு வருகிறார்கள். அதற்கு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ராயன் படத்தில் அவர் பாடிய ‘உசுரே நீதானே’ அந்த வரி பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனது.
ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பக்கம் கலக்கி கொண்டு இருக்க மற்றோரு பக்கம் புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? என்ற பழமொழிக்கு ஏற்றவாறு அவருடைய மகள் கதீஜா ரஹ்மான் மற்றோரு பக்கம் கலக்கி கொண்டு இருக்கிறார். கதீஜா ரஹ்மான் தற்போது இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மின்மினி’ படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.
தந்தை ஏ.ஆர்.ரஹ்மானின் உசுரே காய்ச்சல் பெரிய அளவில் பரவியது போல, அவருடைய சிங்க பெண் கதீஜா ரஹ்மான் ‘மின்மினி’ படத்திற்கு இசையமைத்துள்ளது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. மின்மினி படம் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் பிரீமியர் ஷோ பார்த்த அனைவரும் படத்தினை பற்றி பாராட்டி வருகிறார்கள்.
படம் பற்றி பாராட்டுவது ஒரு பக்கம் இருக்க மற்றோரு பக்கம் கதீஜா ரஹ்மான் பின்னணி இசை மிகவும் நன்றாக இருப்பதாகவும், இந்த வருடத்தில் வெளிவந்த படங்களில் சிறப்பான பின்னணி இசை கொடுத்த இசையமைப்பாளர்களில் அவரும் ஒருவர் என புகழ்ந்து பேசி வருகிறார்கள்.
இந்த படத்துக்கு முன்னாடி கதீஜா ரஹ்மான் வேறு படத்துக்கு இசையமைத்து இருக்கிறாரா? என்ற கேள்வி பலருடைய மனதில் இருக்கும். அதற்கு விடை என்றால் இந்த மின்மினி படம் தான் அவருக்கு முதல் படம். இந்த படத்துக்கு முன்னாடி அவர் சில ஆல்பம் பாடல்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த நிலையில், இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.