நேற்று ஷாருக்கானை வசூலில் தோற்கடித்த மான்ஸ்டர் கே.ஜி.எஃப்!!!
கிறுஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு அனைத்து மொழிகளிலும் நிறையை படங்கள் வெளியாகின. இதில் கன்னடத்தில் யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான கே.ஜி.எஃப் தமிழ் தெலுங்கு , ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளிலும், ஷாருகான் நடிப்பில் ஜீரோ படமும் பிரமாண்டமாக வெளியானது.
இதில் ஷாருகான் , அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜீரோவில் ஷாருகான் உயரம் குறைந்தவராக நடத்திருந்தார். இந்த படம் ரசிகர்களை கவரும்படி அமையவில்லை ஆதலால் நாளுக்கு நாள் வசூல் குறைந்து காணப்பட்டது.
அதே நேரம் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் படத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகியது. திரையரங்குகள், காட்சிகள் என அதிகரித்தன. இப்படம் வசூல் நூறு கோடியை தாண்டியுள்ளது. இப்படத்தின் எட்டாவது நாள் வசூல் 1.25 கோடி வசூல் செய்துள்ளது. அதே எட்டாம் நாள் வசூலாக ஜீரோ படம் 1 கோடி வசூல் ஈட்டியுள்ளது.
DINASUVADU