ராக்கியின் அடுத்த ஆட்டத்திற்கான பூஜை தொடங்கியது!! கே.ஜி.எஃப் 2 அப்டேட்!!!
- கன்னட சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம் கே.ஜி.எஃப்
- இப்படத்தில் யாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
- இரண்டாம் பாகத்தில் பாலிவுட் முக்கிய நடிகர் நடிக்க உள்ளார்.
தென்னிந்திய சினிமா சமீப வருடங்களாக உலக சினிமா அளவிற்கு பிரமாண்டத்தையும், கதைகளங்களையும் உருவாக்கி வெற்றி அடைந்து வருகிறது. எந்திரன், பாகுபலி 1 & 2, 2.O என தொடங்கி கன்னட சினிமாவில் தற்போது கே.ஜி.எஃப் என பிரமாண்டமும், அதற்கேற்ற கதைகளமும் பார்ப்பவர்களை மிரள செய்கிறது.
அப்படி சென்ற ஆண்டு வெளியாகி இந்திய சினிமா ரசிகர்களை மிரட்டிய கே.ஜி.எஃப் படக்குழு தனது அடுத்து பாகத்திற்கான வேலையை துவக்கி விட்டது. இந்த பாகம் 2020இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாகத்தில் ராக்கியுடன் (கதாநாயகன் பெயர் யாஷ்) மிரட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்கான பூஜை நேற்று போடப்பட்டது.
DINASUVADU