Srinidhi Shetty: நான் மேக்கப்பே இல்லாமல் இப்படிதான் இருப்பேன்! கேஜிஎஃப் நாயகியின் வைரல் போட்டோ!
கன்னடத்தை தாண்டி தமிழில் மிக்பெரிய வெற்றி பெற்ற ‘கே.ஜி.எஃப்’ திரைப்படத்தில் நடிகர் யாஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இளம் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
மாடல் அழகியாக இருந்து வந்த இவர் மொத்தமாகவே மூன்றே திரைப்படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். நடிகை ஸ்ரீநிதி தனது நடிப்பு திறமையால் மட்டும் ரசிகர்களை கவர்வது மட்டுமின்றி, போட்டோஷூட் மூலமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
கடைசியாக இவர் தமிழில் நடித்த கோப்ரா திரைப்படத்தை தொடர்ந்து, வேறு படங்கள் வெளியான மாதிரி தெரியவில்லை. வாய்ப்புகள் கிடைக்க வில்லையா என்று தெரில்வில்லை, அப்போப்போ இவரும் போட்டோ ஷூட் நடத்தும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
இப்பொது, சில புகைப்பங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் அவர் மேக்கப்பே இல்லாமல் போஸ் கொடுத்திருக்கிறார். தற்பொழுது, அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது, மேலும் இந்த புகைப்படஙக்ளுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்தவண்ணம் உள்ளது.