நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 67 -வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. தற்காலிமாக தளபதி 67 என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
மேலும், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்த நிலையில், நேற்று படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது.
இந்த நிலையில், தற்போது ‘தளபதி 67 ‘ படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, கேஜிஎப் படத்தில் அதீரா எனும் பயங்கரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வாய்த்த சஞ்சய் தத் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்ததாக படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வேறு எந்தெந்த பிரபலங்கள் எல்லாம் நடிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…
சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு…
டெல்லி : பாலஸ்தீன நாட்டின் எல்லையில் உள்ள காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்குமான தாக்குதல் என்பது…
டெல்லி : விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை…