லியோ படத்துக்காக வெறித்தனமாக ரெடியாகும் கேஜிஎப் ‘அதீரா’..! வைரலாகும் புகைப்படம்.!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. த்ரிஷா. மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
மேலும், இதில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால், படத்தில் சஞ்சய் தத் நடிப்பது தான். ஏனென்றால், கேஜிஎப் 2 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சஞ்சய் தத்தின் மார்க்கெட் எல்லா மொழிகளிலும் உயர்ந்துவிட்டது என்றே கூறலாம். எனவே சஞ்சய் தத் லியோ திரைப்படத்தில் நடித்து வருவதால் பாலிவுட் சினிமாவிலும் லியோ படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.
இந்த நிலையில், லியோ படத்தில் நடிப்பதற்காக நடிக சஞ்சய் தத் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் ஜிம்மில் உடற் பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த பலரும் “அதீரா லியோ படத்திற்கு வெறித்தனமாக தயாராகி வருகிறாரே” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும், இந்த லியோ திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.