தனுஷிற்கு வில்லனாகும் கேஜிஎப் ஆதிரா.! வெளியான சீக்ரெட் தகவல்.!

Default Image

நடிகர் தனுஷ் தற்போது “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. அரசியல் கலத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகவுள்ளது. படத்தில் தனுஷ் அரசியல் வாதியாக நடிப்பதாக சொல்கிறார்கள். ஆனால், இன்னும் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இதையும் படியுங்களேன்- அந்த பாட்டோட அட்டர் காப்பி தான் சில்லா சில்லா .! வச்சு செய்து வரும் நெட்டிசன்கள்.!

இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடந்து முடிந்த பிறகு சேகர் கம்முலா தனுஷை வைத்து இயக்கவுள்ள படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், அவ்வபோது படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவலும் இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று.

அந்த வகையில், தற்போது இந்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வில்லனாக அவர் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்கிறார்கள். ஏற்கனவே கேஜிஎப் 2 படத்தில் ஆதிரா எனும் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சய் தத் தனுஷ் படத்தில் நடிக்கவுள்ளதால், படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்