கே.ஜி.எப்-2, பீஸ்ட்-க்கு போட்டியில்லை.! அந்தர் பல்டி அடித்த ராக்கி பாய்.!
இந்த வருடம் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கேஜிஎஃப்-2. இந்த படத்தை இயக்குனர் பிரசாத் நீல் இயக்கியுள்ளார். யாஷ் ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். மேலும் ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் போன்ற பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 14- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்திற்கான ட்ரைலர் நேற்று வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் கேஜிஎப் வெளியாகும் ஒரு நாளிற்கு முன்பு அதாவது ஏப்ரல் 13-ஆம் தேதி விஜய் நடிப்பில் பீஸ்ட் வெளியாகிறது. இதனால் சமூக வலைத்தளத்தில் பீஸ்ட் vs கேஜிஎப் என ரசிகர்கள் கூறிவருகிறார்.
மேலும், இதுகுறித்து இப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் நேற்று யாஷ் பேசியுள்ளார் அதில் ” பீஸ்ட் vs கேஜிஎப் சொல்லாதீங்க …பீஸ்ட் & கேஜிஎப் சொல்லுங்க..போட்டியிடுவதற்கு தேர்தல் அல்ல, சினிமாவை கொண்டாடுவோம். இரண்டு படங்களும் ரசிகர்களுக்கு பிடிக்கும்..நானும் பீஸ்ட் பார்க்கிறேன்..நீங்களும் கேஜிஎப் பாருங்க” என கூறியுள்ளார்.