கேஜிஎப் 2 நஷ்டம்..இன்னும் அதிலிருந்து மீளவில்லை! பிரபலம் குமுறல்!

கேஜிஎப் 2 : யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் எந்த அளவுக்கு பெரிய வெற்றியை பெற்றது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகி இருந்த நிலையில், இரண்டாவது பாகம் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது.
எனவே, மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் கடந்த 2022-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட காரணத்தால் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருந்தது.
படம் மிகப்பெரிய ஹிட் ஆனாலும் கூட படத்தின் இசை உரிமை பெரிய விலைக்கு வாங்கியும் கூட பெரிய அளவில் லாபம் கொடுக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. கேஜிஎப் 2 படத்தின் ஆடியோ உரிமையை Lahari Music என்ற நிறுவனம் தான் வாங்கி இருந்தது. படத்திற்கு முதல் பாகத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் தான் இசையமைத்து இருந்தார்.
முதல் பாகத்தில் அவருடைய இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பெரிய அளவில் பேசப்பட்டது. இரண்டாவது பாகத்தில் பின்னணி இசை அருமையாக இருந்தாலும் கூட பாடல் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை என்று கூட சொல்லலாம். இந்நிலையில், படத்தின் இசை உரிமையை 7 கோடிகளுக்கு மேல் வாங்கியும் கூட இலாபம் வரவில்லை என Lahari Music நிறுவனத்தை சேர்ந்த வேலு என்பவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ” கேஜிஎப் 2 படத்தின் ஆடியோ உரிமையை 7.2 கோடி க்கு நாங்கள் வாங்கினோம். ஆனால், இவ்வளவு விலைக்கு வாங்கியும் கூட எங்களுக்கு லாபம் வரவில்லை. நஷ்டத்தில் இருந்து இன்னும் மீளவில்லை ” என தெரிவித்துள்ளார்.
“We Bought #KGFChapter2 Audio Rights For 7.2 Crs But It Didnt Recover And Is A Loss Venture For Us “
– @LahariMusic Velu ✨
pic.twitter.com/TvtyrO0MfB— Analyst (@BoAnalyst) July 20, 2024