இந்தியாவிலேயே முதல் முறை…கேரள அரசின் பிரத்யேக OTT தளம் அறிமுகம்.!

Kerala Gov OTT

Kerala Govt OTT : இந்தியாவின் முதல் அரசுக்கு சொந்தமான OTT தளமான CSpace கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் நேற்றைய தினம் இந்தியாவின் முதல் அரசுக்கு சொந்தமான OTT தளத்தை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். அமேசான், நெட்பிளிக்ஸ் போன்று செயல்பட உள்ள இந்த ஓடிடி தளத்திற்கு ‘சி ஸ்பேஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

READ MORE – இந்த வாரம் வயிறு குலுங்க சிரிக்கலாம்! ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

OTT தளத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், இந்த ஓடிடி தளமானது மலையாள சினிமாவின் முன்னேற்றத்திற்கு முதல் படியாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் அவர் இது குறித்து பேசுகையில், “பல தனியார் OTT தளங்கள் அதிக அளவில் பேசப்படும் மொழியில் உள்ள திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

READ MORE – மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்? ‘லால் சலாம்’ முதல் ‘லவ்வர்’ வரை!

அதற்கு முக்கிய காரணம் லாபத்தை அதிகரிப்பதாகும். CSpace-ன் முன்னுரிமையானது கலை மற்றும் கலாச்சார மதிப்புடைய படங்கள் ஸ்ட்ரீமிங் செய்யப்படும். இந்த தளம் மலையாள மொழியைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் என்ற பன்முக நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று கூறிஉள்ளார்.

READ MORE – திரையரங்கில் மிஸ் பண்ணிட்டீங்களா? ஓடிடிக்கு வருகிறது ‘டெவில்’!

இந்த ‘சி ஸ்பேஸ்’ ஓடிடி தளம் மூலம் மலையாள திரைப்படத்துறை அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறும் நோக்குடத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அந்த ஓடிடி தளமானது உயர்தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுடன் செயல்படும். மொத்தமாக கட்டணம் செலுத்தாமல், குறிப்பிட்ட திரைப்படத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்