மேடம் எங்க போறீங்க? பாலிவுட் நடிகருடன் ஆட்டோ சவாரி செய்த கீர்த்தி சுரேஷ்!

பிரபல பாலிவுட் நடிகரான வருண் தவான் தனது 18 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிப்பதாக தகவல் வெளியானது. தற்போது, அந்த தகவல் உறுதியாகியுள்ளது, சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மும்பை சாலையில் வருண் தவானுடன் ஆட்டோவில் பயணித்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ், இந்த திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் என்று தெரிகிறது. இந்த படம் கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான தளபதி விஜய்யின் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘தெறி’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் என்று கூறப்படுகிறது.
அட ஆமாங்க… தமிழில் விஜய் மற்றும் சமந்தாவை வைத்து தெறி படத்தை இயக்கியவர் இயக்குனர் அட்லீ. தற்போது, அதன் அதிகாரப்பூர்வ ரீமேக்கில் நடிகர் வருண் தவானை வைத்து இயக்குனர் காலீஸ் இயக்குகிறார். இந்த படத்தை அட்லீயே தயாரிப்பதாக கூறப்படுகிறது.
தற்காலிகமாக, “VD 18” என்று பெயரிடப்பட்ட இந்த படத்தின் புதிய செட்யூல் ஒன்று சமீபத்தில் மும்பையில் தொடங்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பிற்குப் பிறகு, வருண் தவானும் கீர்த்தி சுரேஷும் ஆட்டோ சவாரி செய்துள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் வீடியோ எடுத்துள்ளனர், இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு தகவலின்படி, கமர்ஷியல் படமாக இருக்கும், இந்த படத்தில், வருண் தவான் இதுவரை இல்லாத அவதாரத்தில் நடிக்கிறார். அவருடன் இணைந்து எழுத்தாளர் பின்னணி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்படுகிறது.
❤️ @KeerthyOfficial @Varun_dvn #KeerthySuresh #VarunDhawan pic.twitter.com/XB3qJ0PP93
— Trends Keerthy (@TrendsKeerthy) September 22, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025