“அடுத்த மாதம் கோவாவில் எனது திருமணம்!” வெட்டிங் அப்டேட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!
அடுத்த மாதம் கோவாவில் தனது திருமணம் நடைபெற உள்ளது என நடிகை கீர்த்தி சுரேஷ் திருப்பதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

திருப்பதி : ரஜினிமுருகன், ரெமோ, சர்கார் என பல்வேறு திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவிலும், தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது ஹிந்தி சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ள்ளார்.
இப்படியான சமயத்தில் தனது நீண்ட கால காதலை வெளிப்படுத்தி உடனுக்குடன் தனது திருமணம் பற்றிய அறிவிப்பையும் அறிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இவரின் நீண்ட வருட நண்பரும் தொழிலதிபருமான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்ய உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. டிசம்பர் மாத 2ஆம் வாரத்தில் திருமணம் என கூறப்பட்ட நிலையில் அதனை கீர்த்தி சுரேஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய கீர்த்தி சுரேஷ் வந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் , “எனது திருமணம் கோவாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. எனது ஹிந்தி படம் பேபி ஜான் வெற்றியடைய வேண்டும் என சாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன்” என பட அப்டேட் மற்றும் திருமணம் குறித்த அப்டேட்டையும் கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
அண்மையில் கீர்த்தி சுரேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், 15 ஆண்டுகால முடிவிலா காதல் என பதிவிட்டு AntoNY KEErthy என பதிவிட்டிருந்தார்.