அடடா நம்ம கீர்த்தி சுரேஷா இது..? வைரலாகும் பள்ளி பருவ புகைப்படம்.!
நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வபோது வெளியானால் இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் பள்ளி கூடம் படுத்துக்கொண்டிருந்த சமயத்தில் எடுத்த பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
#Throwback : கீர்த்தி சுரேஷின் பள்ளி பருவ புகைப்படம்.!#keerthiSuresh pic.twitter.com/yzdwa2Q7Vs
— CineBloopers (@CineBloopers) January 24, 2023
இந்த புகைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் பள்ளி சீருடை அணிந்துகொண்டு இரட்டை ஜடை போட்டுகொண்டு மிகவும் அழகாக இருக்கிறார். எனவே, புகைப்படத்தை பார்த்த பலரும் கீர்த்தி சிறிய வயதிலே அழகாக இருக்கிறார் என கருத்துக்களை பதிவிட்டு லைக் மற்றும் ஷேர் செய்து இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர்.
மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கில் “தசரா” எனும் திரைப்படத்திலும், தமிழில் மாமன்னன் திரைப்படத்திலும் நடித்துமுடித்துள்ளார். இதில் “தசரா” திரைப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக கீர்த்தி கே சந்திரா என்பவர் இயக்கத்தில் “ரிவால்வர் ரீட்டா” எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.