கீர்த்தி சுரேஷ் : சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்ய ஆசை இருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் ஆரம்ப காலத்தை போல இல்லை என்றாலும் கூட அவருக்கு பட வாய்ப்புகள் ஒரு பக்கம் தொடர்ச்சியாக குவிந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், தமிழில் ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி, ஆகிய படங்களையும், ஹிந்தியில் பேபி ஜான் படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வித்தியாசமான கதையம்சத்தை கொண்ட படமாக இருக்கும் என தெரிகிறது. இந்த சூழலில், தனக்கு அடுத்ததாக நடிக்க ஆசை கொண்ட கதாபாத்திரங்கள் பற்றியும் மகாநடி படம் பற்றியும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ‘மகாநடி’ படங்களில் நான் நடித்த கதாபாத்திரம் போல், அதிக பொறுப்புடன் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் தான் நான் அதிகமாக ஆர்வம் காட்டிகொண்டு வருகிறேன்.
பொதுவாக நாம் படங்களில் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களில் சில அந்த நடிகர், நடிகையின் வாழ்க்கையில், தொழில்ரீதியாக அவர்களுக்கு இருக்கக்கூடிய கோணத்தை அப்படியே மாற்றிவிடும். அப்படியான படங்களில் நாம் நடித்தோம் என்றால், இனிமேல் தொடர்ச்சியாகவே நமக்கு அப்படியான கதாபாத்திரங்கள் தான் வரும்.
அதுபோன்ற கேரக்டர்கள் அவர்களை வழிநடத்திச் செல்லும். வித்தியாசமான, மிகவும் நல்ல கேரக்டர்களுக்கு இருக்கும் பலம் இதுதான். ‘மகாநடி’ படத்தில் நான் நடித்து முடித்த பிறகு அந்தக் கேரக்டர் எனக்குள் ஏற்படுத்தியிருந்த பாதிப்பை, இத்தனை வருடங்களான பிறகும் கூட என்னால் மறக்க முடியவில்லை. தொடர்ச்சியாகவே அதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. தற்போது சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க நான் முன்னுரிமை தருகிறேன்’ எனவும் கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…