நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ஜெயம் ரவியுடன் இணைந்த சைரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர்கள் எல்லாம் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருந்தது. படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேட்டிகளில் கலந்து கொண்டு படம் பற்றி கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜெயம் ரவி படக்குழுவினர் என பலரும் பேசி வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற நபரை கன்னத்தில் அறைந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
விஜய் பாட்டுக்கு அழகாக பெல்லி ஸ்டெப் போட்ட நடிகை கீர்த்தி ஷெட்டி.!
இது குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ் ” நான் சினிமா துறையில் நடிக்க வருவதற்கு முன்பு ஒரு நாள் நள்ளிரவில் என்னுடைய தோழிகளுடன் வெளியே சென்று கொண்டு இருந்தேன். அந்த சமயம் என்னுடைய பின்னால் தொடர்ந்து வந்து தவறாக நடந்து கொள்ள முயன்றான். ரொம்ப மதுபோதையில் அவர் இருந்தார்.
என்னை தொட முயன்ற போது எனக்கு மிகவும் கடுப்பாகி விட்டது அவரை பிடித்து கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டேன். பிறகு அந்த கோபத்தில் அந்த நபரும் என்னை தாக்கினார். புறகு என்னுடைய தோழிகள் அனைவரும் இணைந்து அந்த நபரை பிடித்து அருகில் இருந்த காவல்துறையில் ஒப்படைத்தோம்” என கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…