சினிமா

பட வாய்ப்புகளே இல்லை! கவர்ச்சி நடிகையுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்?

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் கடைசியாக தமிழில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக சொல்லும்படி அளவிற்கு ஆரம்ப காலகட்டத்தை போல பட வாய்ப்புகள் வரவில்லை என்றே சொல்லலாம். இதன் காரணமாக படங்களில் ஹீரோயினாக மட்டுமின்றி முக்கியமான கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில், அவர் தற்போது ஜெயம் ரவி நடித்து வரும் சைரன் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் மீண்டும் ஒரு வெப் தொடர் ஒன்றில்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல கவர்ச்சி நடிகை ஒருவருடன் இணையவுள்ளாராம்.

அந்த கவர்ச்சி நடிகை வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவில், சித்திரம் பேசுதடி 2, கபாலி , தோனி, ரத்த சரித்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான  நடிகை ராதிகா ஆப்தே தான். இவருடன் இணைந்து தான் கீர்த்தி சுரேஷ் ஒரு புதிய வெப் தொடரில்  நடிக்கவுள்ளாராம். இவர்கள் இருவரும் இணையும் வெப் தொடரை  தர்மராஜ் ஷெட்டி என்பவர் இயக்கவுள்ளாராம்.

ஞானவேல் சொல்வது உண்மை இல்லை! நான் சொன்னா புயல் கிளம்பிடும்- அமீர்!

தர்மராஜ் ஷெட்டி இதற்கு முன்பு எந்த திரைப்படத்தியும் இயக்கவில்லை. முதன் முதலாக நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோரை வைத்து தான் தர்மராஜ் ஷெட்டி படத்தை இயக்கி சினிமாவில் அறிமுகமாகவுள்ளாராம். இந்த திரைப்படம் பழிவாங்கும் திரில்லர் தொடர் என்றும் கூறப்படுகிறது. இந்த தொடருக்கு “அக்கா ” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் ஹீரோயினாக மட்டுமே நடித்து கலக்கி வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் இப்படி இறங்கிவிட்டார். மேலும், கீர்த்தி சுரேஷ் தற்போது சைரன் மற்றும் வெப் தொடர் ஆகியவற்றை தொடர்ந்து ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவேதி ஆகிய படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

 

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

49 mins ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

13 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

19 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

19 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

19 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

19 hours ago