பட வாய்ப்புகளே இல்லை! கவர்ச்சி நடிகையுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் கடைசியாக தமிழில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக சொல்லும்படி அளவிற்கு ஆரம்ப காலகட்டத்தை போல பட வாய்ப்புகள் வரவில்லை என்றே சொல்லலாம். இதன் காரணமாக படங்களில் ஹீரோயினாக மட்டுமின்றி முக்கியமான கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில், அவர் தற்போது ஜெயம் ரவி நடித்து வரும் சைரன் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் மீண்டும் ஒரு வெப் தொடர் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல கவர்ச்சி நடிகை ஒருவருடன் இணையவுள்ளாராம்.
அந்த கவர்ச்சி நடிகை வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவில், சித்திரம் பேசுதடி 2, கபாலி , தோனி, ரத்த சரித்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ராதிகா ஆப்தே தான். இவருடன் இணைந்து தான் கீர்த்தி சுரேஷ் ஒரு புதிய வெப் தொடரில் நடிக்கவுள்ளாராம். இவர்கள் இருவரும் இணையும் வெப் தொடரை தர்மராஜ் ஷெட்டி என்பவர் இயக்கவுள்ளாராம்.
ஞானவேல் சொல்வது உண்மை இல்லை! நான் சொன்னா புயல் கிளம்பிடும்- அமீர்!
தர்மராஜ் ஷெட்டி இதற்கு முன்பு எந்த திரைப்படத்தியும் இயக்கவில்லை. முதன் முதலாக நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோரை வைத்து தான் தர்மராஜ் ஷெட்டி படத்தை இயக்கி சினிமாவில் அறிமுகமாகவுள்ளாராம். இந்த திரைப்படம் பழிவாங்கும் திரில்லர் தொடர் என்றும் கூறப்படுகிறது. இந்த தொடருக்கு “அக்கா ” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் ஹீரோயினாக மட்டுமே நடித்து கலக்கி வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் இப்படி இறங்கிவிட்டார். மேலும், கீர்த்தி சுரேஷ் தற்போது சைரன் மற்றும் வெப் தொடர் ஆகியவற்றை தொடர்ந்து ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவேதி ஆகிய படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.