மொத்தம் 25.! கொலைநடுங்க வைத்த கீர்த்தி சுரேஷ்.! ரத்தம் தெறிக்கும் புதிய ட்ரைலர்.!
ராக்கி படத்தை இயக்கத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அருண் மாதேஷ் வரண் அடுத்தாக செல்வராகவன் -கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து “சாணிக் காயிதம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வரும் மே 6-ஆம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியானது. டீசரை பார்த்த ரசிகர்கள் இந்தப் படமும் ராக்கி திரைப்படத்தை போலவே ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை நிறைந்த கதைக்களமாக இருக்கும் என கூறினார்கள். அதே போலவே டீசரும் இருந்தது.
இந்நிலையில், டீசரை தொடர்ந்து தற்போது படத்தின் டிரைலரை அமேசான் பிரேம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. டிரைலரில் முதலில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் கான்ஸ்டேபிள்-ஆக காட்டப்படுகிறார். அதற்கு பிறகு குற்றவாளியாக தான் 25 கொலை செய்துள்ளதாக ஒப்புக்கொள்வது போல் காட்டப்பட்டுள்ளது.
அதைபோல் செல்வராகவனும் சிரித்துக்கொண்டே தனது எதார்த்தமான நடிப்பால் மிரட்டியுள்ளார். இதுவரை இல்லாத விதமாக கீர்த்தி சுரேஷ் ஆக்ரோஷமாக இந்த படத்தில் பொன்னி என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்துள்ளார்.
ரத்தம் தெறிக்க தெறிக்க கட்டப்பட்டுள்ள கொலைக்காட்சிகள் வசனங்கள் என அனைத்தும் ரசிகர்களை புல்லரிக்க வைத்துவிட்டது. கையில் துப்பாக்கி, கத்தி என நடிப்பில் மிரட்டி இருக்கும் கீர்த்தி சுரேஷிற்கு இந்த படம் நல்ல வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.